#BREAKING வடகிழக்கு பருவமழை எதிரொலி - அரசு மருத்துவமனைகளுக்கு ஹை அலர்ட்

 
14 kids infected with HIV Hepatitis after blood transfusion in UP hospital

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவின் பேரில், சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

hospital

அதன்படி, அவசர சிகிச்சை பிரிவு, இதய சிகிச்சை பிரிவு, பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை அரங்குகள் தடையின்றி இயங்க வேண்டும். மின்சாரம் தடைபடக்கூடாது என்பதற்காக ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும். ஆக்சிஜன் 7 நாட்களுக்கு இருப்பு வைக்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ்கள் எரிபொருள், மருந்துகளுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். பாம்பு கடி விஷமுறிவு மருந்து, நாய்க்கடி தடுப்பூசி, டெங்கு, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மருந்துகள், குளோரின் மாத்திரைகள் என அனைத்தும் 7 நாட்களுக்கு ஸ்டாக் இருக்க வேண்டும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய வெள்ளம், புயல் பாதிக்கும் மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மழைக்கால நோய்களான டெங்கு, எலிக்காய்ச்சல், வயிற்றுப்போக்கு, காய்ச்சலை கண்டறிய தனி கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். DBC பணியாளர்கள் மூலம் கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட வேண்டும். மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால்களை சுத்தம் செய்யவும், மின்கசிவு, தீ விபத்தை தடுக்கவும், குடிநீர், உணவு, கழிவறை வசதிகளை முறையாக பராமரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மாவட்ட ஆட்சியர்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.