#BREAKING இன்னும் 3 நாட்களில் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை!
வடகிழக்குப் பருவமழை அடுத்த 2-3 நாட்களில் தொடங்குவதற்கு சாதகமான சூழல் உருவாகி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வடகிழக்குப் பருவமழை அடுத்த 2-3 நாட்களில் தொடங்குவதற்கு சாதகமான சூழல் உருவாகி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனையடுத்து தமிழ்நாட்டில் வரும் 15ஆம் தேதி முதல் 18ஆம்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை வருகிற 15 ஆம் தேதி தொடங்கும் என்றும், இதனால் தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அக்டோபர் 15ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் அக்டோபர் 17,18 ஆகிய தேதிகளிலும், ஆந்திரா மாநிலம் ராயலசீமா பகுதியில் அக்டோபர் 15,16ஆகிய தேதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

