ஆசனவாயில் காற்றுக் குழாயை சொருகியதால் விபரீதம்! வடமாநில தொழிலாளி பலி

 
Death

பெரியபாளையம் அருகே தனியார் தொழிற்சாலையில் பணியாற்றிய வடமாநில தொழிலாளி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார். 

Karnataka's first death of H3N2


 திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே ஆலப்பாக்கம் பகுதியில் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு உள்ளூர் தொழிலாளர்கள் மட்டுமல்லாது, ஏராளமான வடமாநில தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இங்கு பணியாற்றி வந்த ஒடிஸாவை சேர்ந்த சௌமியா பிரியரஞ்சன் சாவோ (23)-க்கு திடீரென வயிற்று வலி அதிகமானதால் செங்குன்றம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வடமாநில தொழிலாளி உயிரிழந்தார். தகவலறிந்த பெரியபாளையம் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தொழிற்சாலையில் காற்று குழாயை வைத்து தூய்மை பணிகளை மேற்கொண்டிருந்த போது உயிரிழந்த சௌமியா பிரியரஞ்சன் ஆசன வாயில் காற்று குழாயை சக தொழிலாளி சொருகியுள்ளனர். அதன்வழியே காற்று சென்றுள்ளது. இதன்காரணமாக வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வடமாநில தொழிலாளி உயிரிழந்தது தெரிய வந்தது. இதனையடுத்து காற்று குழாயை ஆசன வாயில் சொருகி உயிரிழப்பை ஏற்படுத்திய ஆந்திராவை சேர்ந்த சக தொழிலாளி சாய் ராகவா என்பவரை ஐபிசி 304(2) சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.