திருவேற்காட்டில் வடமாநில இளைஞர் கல்லால் அடித்துக்கொலை

 
murder

திருவேற்காட்டில் வடமாநில வாலிபர் கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Most famous murder cases that are too chilling for the world to forget -  iPleaders

திருவேற்காடு அடுத்த பெருமாள் அகரம், பெரியார் நகர் பகுதியில் உள்ள முட்புதர்கள் நிறைந்த காலி நிலத்தில் வாலிபர் ஒருவர் தலையில் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக வந்த தகவலையடுத்து திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கொலை செய்யப்பட்டு கிடந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்த நபர் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுதிர்குமார்(30), என்பதும் அயனம்பாக்கம், செல்லியம்மன் நகர் பகுதியில் நண்பர்களுடன் அறையில் தங்கி அம்பத்தூரில் உள்ள வெல்டிங் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த சனிக்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் இன்றுதலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பது தெரியவந்தது. மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்தில் திருவேற்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அவர்களது நண்பர்களிடமும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.