அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவு; ஈபிஎஸ் மட்டுமே வேட்புமனு தாக்கல்

 
எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவு பெற்றது. 

eps

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில் நிறைவு நாளான இன்று பிற்பகல் 3மணிவரை மொத்தம் 222 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன . தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரிலேயே வழங்கப்பட்டதால், எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக போட்டியின்றி ஒருமனதாக தேர்வாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மூவர் தொடர்ந்த வழக்கு வரும் 22ஆம் தேதி விசாரிக்கப்பட்டு 24ம் தேதி தீர்ப்பளிக்கப்பட உள்ளதால் 24 ம் தேதி வரை பொதுச்செயலாளர் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட தடை விதிக்கப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வானதாக அதிகாரபூர்வ அறிவிப்பு அதிமுக தலைமையால் வெளியிடப்படவில்லை. என்றாலும் அனைத்து வேட்புமனுக்களும் எடப்பாடி பழனிசாமி பெயரிலேயே தாக்கல் செய்யப்பட்டதை அறிந்த அதிமுகவினர் , எம்ஜிஆர் மாளிகை வளாகத்தில்  உற்சாக முழக்கங்களை எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 
 

Tamil News | அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்: எடப்பாடி பழனிசாமி வேட்புமனு  தாக்கல் | Dinamalar

அதிமுகவிற்கு தொடர்பற்ற நபர்களோ ,  அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களோ வேட்புமனுத் தாக்கல் செய்ய வருவதை  தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக  300-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் எம்ஜிஆர் மாளிகை முன்பு காலை முதலே அமர்ந்திருந்தனர் .