அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் - வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்...பலத்த போலீஸ் பாதுகாப்பு

 
admk office

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. 

எடப்பாடி பழனிச்சாமி தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக உள்ளார். இவர் நிரந்தர பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவதற்காக அதிமுகவில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்படுகிறது.  இது குறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்,   அதிமுக பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்கிற கட்சியின் சட்ட விதியின் படி பொதுச் செயலாளர் பொறுப்பிற்கு தேர்தல் நடத்தப்படுகிறது.  இந்த பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் இன்று முதல் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம்.  காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி வரை மனுக்களை தாக்கல் செய்யலாம். மார்ச் 20 ஆம் தேதி அன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. மனுக்களை வாபஸ் பெற விரும்புவோர் மார்ச் மாதம் 21ம் தேதி அன்று பிற்பகல் 3 மணிக்குள் திரும்பப் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.  மார்ச் 26 ஆம் தேதி அன்று காலை 8 மணி முதல் மாலை 6:00 மணி வரைக்கும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மார்ச் 27ஆம் தேதி திங்கட்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

admk

பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் அதிமுக தலைமைக் கழகத்தில் கட்டணத் தொகை 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி விருப்பமான பெறலாம் என்றும் , விதிமுறைகளை பின்பற்றி விருப்பமுனுக்களை பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருக்கிறது. இன்று வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில் கூடுதல் பாதுகாப்பு கோரி அ.தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதால், அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலாக 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.