போடுற வெடிய : மீண்டும் வருகிறது Nokia 3210 ..!

 
1
Nokia 3210 மொபைல் போன் கடந்த 1999 ம் ஆண்டு வெளியானது. இது இந்திய சந்தையில் ரூ.2,999க்கு விற்பனையானது.

உலகம் முழுவதும் இந்த செல்போன் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. அதை தொடர்ந்து ஸ்மார்ட் போன்கள் வருகையால் இதன் தயாரிப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டது.

தொழில் நுட்பம் தொடர்ந்து வளர்ச்சியடைந்தாலும் நம் நினைவுகளில் நோக்கியா 3210 ஆழமாக பதிந்துள்ளது. இதன் ஆயுள், எளிமை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றின் சின்னமாக, 3210 பலரின் இதயங்களில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்தது.

இப்போது, உலகெங்கிலும் உள்ள மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த நோக்கியா தயாராகி உள்ளது.

இந்நிலையில் Nokia 3210 மொபைல் போன் 25 ஆண்டுகளுக்கு பிறகு நவீன வசதிகளுடன் மீண்டும் தற்போது விரைவில் விற்பனைக்கு வர உள்ளது.இந்த நோக்கியா போன் – 2024 க்கான புதிய பட்ஜெட் போன் ஆகும் இதில் 4G, Bluetooth, Snake game 2 வசதிகள் உள்ளன.