மகளிர் உரிமைத் தொகை வேண்டாம்..அரசு வழங்கிய ரூ.5,000-த்தை திருப்பி அனுப்பிய மதுரை ஆர்வலர்..!
Feb 15, 2026, 05:15 IST1771112721000
தமிழக அரசு மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் வழங்கியது.
இந்நிலையில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சங்கர பாண்டியன் என்பவர், தனது குடும்பத்திற்கு வழங்கப்பட்ட தொகையை ஏற்க மறுத்து, மதுரை ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தபால் நிலையத்திலிருந்து முதலமைச்சர் தனிப்பிரிவிற்குத் திருப்பி அனுப்பினார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தின் கடன் சுமை சுமார் 10 லட்சம் கோடியாக உள்ளதாகவும்,
பல மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்க முடியாமல் அரசு திணறி வரும் நிலையில், தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்பு இப்படிப் பணம் வழங்குவது அதிர்ச்சியளிப்பதாகவும் கூறினார்.
மேலும், இந்தத் தொகை மகளிர் உரிமைத் தொகை என்பதை விட, தேர்தல் ஓட்டுக்காகக் கொடுக்கப்படும் பணம் போலவே தோன்றுவதாகவும் குறிப்பிட்டார்.

