No "UPI" Only "Cash"? ₹2,000-க்கு மேல் போனால் இனி ரொக்கம் மட்டுமே..!
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் ₹2,000-க்கு மேலான பெட்ரோல் மற்றும் டீசல் கட்டணங்களுக்கு இனி யுபிஐ (UPI) மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அம்மாநில பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் (MP Petrol Pump Dealers Association) அறிவித்துள்ளது.
அக்டோபர் 16, 2026 முதல் அமலுக்கு வரவுள்ள இந்த முடிவின்படி, வாகன உரிமையாளர்களின் எரிபொருள் கட்டணம் ₹2,000-ஐத் தாண்டினால் அவர்கள் ரொக்கப் பணமாக (Cash) மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும். அம்மாநிலத்தில் உள்ள சுமார் 4,700 பெட்ரோல் பங்குகளில் இந்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
₹2,000-க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வர்த்தகர் தள்ளுபடி விகிதம் (Merchant Discount Rate - MDR) என்ற கூடுதல் சேவைக்கட்டணம் விதிக்கப்பட உள்ளதே இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாகும்.
-
கூடுதல் நிதியச்சுறுத்தல்: ₹2,000-க்கு மேலான ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.5 எம்.டி.ஆர் (MDR) மற்றும் 18% ஜி.எஸ்.டி (GST) சேர்த்து மொத்தம் ரூ.5.90 செலவாகிறது.
-
மாதாந்திர இழப்பு: ஒரு நாளைக்குச் சராசரியாக 100 இத்தகைய பரிவர்த்தனைகள் நடக்கும் ஒரு பெட்ரோல் பங்கிற்கு மாதத்திற்கு சுமார் ரூ.17,400 கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என சங்கத் தலைவர் அஜய் சிங் தெரிவித்துள்ளார்.
-
மாநிலம் முழுவதும் உள்ள 4,700 பெட்ரோல் பங்குகளைக் கணக்கிடும்போது, இதன் மூலம் டீலர்களுக்கு மாதத்திற்கு மொத்தம் ரூ.8.17 கோடி வரை இழப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

