ரயில் நிலையங்கள் அருகே டாஸ்மாக் வேண்டாம்! விஜய்க்கு பறந்த கடிதம்
ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகளை அகற்ற வேண்டும் என டாஸ்மாக் நிர்வாக இயக்குநருக்கு சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை கடிதம் எழுதியுள்ளது.
ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள 85 டாஸ்மாக் மதுபானக்கடைகளை அகற்ற கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குநருக்கு சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை கடிதம் எழுதியுள்ளது. சென்னை கோட்ட ரயில்வே எல்லை ஜோலார்பேட்டை, விழுப்புரம், சூலூர்பேட்டை வரை உள்ள ரயில் நிலையங்களை ஒட்டி 85 அரசு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், அதனை அகற்ற கோரி கடிதம் எழுதப்பட்டுள்ளது. மதுபோதையில் தண்டவாளத்தை கடப்பது, ரயில்கள் மீது பாட்டில்களை வீசுவது உள்ளிட்டவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்கும் விதமாக இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் அருகில் உள்ள 717 மதுக்கடைகளை தவெக அரசு மூடிய நிலையில், RPF அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடதக்கது.

