“சீட்டும் இல்லை, கொடுத்த காசும் இல்லை”- ஏப்பம் விட்ட கமல்ஹாசன்

 
கமல்ஹாசன் படத்தில் முதல் முறையாக இணைந்த துல்கர் சல்மான் 

தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட பணம் திருப்பி தரப்படாது என மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது.

விளையாட்டு வீரர்கள் அரசியலுக்கு வரவேண்டும்- கமல்ஹாசன்

சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வந்தவுடன், மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என நம்பி 60 பேர் விருப்பமனு தாக்கல் செய்தனர். ஆனால் திமுக கூட்டணியில் இணைந்துள்ள மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவில்லை என கமல்ஹாசன் அறிவித்தார். இதனால் தேர்தலுக்கான விருப்பமனு கட்டணமாக ரூ.50,000 வசூலித்த நிலையில், அதனை நிர்வாகிகள் திருப்பிக்கேட்டதாக தெரிகிறது. 

இப்பிரச்சனை பூதாகரமான நிலையில், தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட பணம் திருப்பி தரப்படாது என கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது. 60 பேரிடம் இருந்து பெறப்பட்ட ரூ.30 லட்சம் கட்சி வளர்ச்சி நிதிக்கு சென்றுவிட்டது என்றும் கட்சி தலைமை விளக்கம் அளித்துள்ளது. எம்.எல்.ஏ சீட்டும், கொடுத்த பணமும் கிடைக்காததால் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனிடையே விருப்பமனு தாக்கல் செய்தவர்கள் யாரும் பணத்தை திரும்ப கேட்கவில்லை, விருப்பமனு கட்டணம் என்பது திரும்பி தரக்கூடிய கட்டணம் எல்ல என்றும் மக்கள் நீதி மய்யம் மழுப்பலாக பதில் கூறியுள்ளது. மேலும் யாரேனும் விருப்பமனு கட்டணத்தை திரும்பி கேட்டால் பரிசீலனை செய்வோம் என்றும் தெரிவித்துள்ளது.