வேங்கைவயலில் மறுவாக்குப்பதிவு கிடையாது - திருச்சி ஆட்சியர் பிரதீப் குமார்

 
tn tn

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் குடிநீருக்காக பயன்படுத்திய நீர் தேக்க தொட்டியில் சிலர் மலம் கலந்த விவகாரம் தமிழ்நாட்டை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

rr

இந்த சம்பவம் நடந்த ஒரு வருடத்திற்கு மேலாகியுள்ளது .இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததால் தேர்தலை புறக்கணிப்பதாக வேங்கை வயல் கிராம மக்கள் அறிவித்தனர்.

tn

இந்நிலையில் திருச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வேங்கைவயல் உள்ளிட்ட எங்கும் மறுவாக்குப்பதிவு கிடையாது என்று  திருச்சி ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். நீர்த்தேக்கத் தொட்டில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் நடவடிக்கை இல்லை என தேர்தலை புறக்கணித்தனர்  வேங்கைவயல் மக்கள்; ஒரு சிலர் மட்டுமே அங்கு வாக்களித்த நிலையில் வேங்கைவயலில் மறு வாக்குப்பதிவு இல்லை என ஆட்சியர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்