வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை - தேர்தல் ஆணையம்
வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி உறுப்பினராக பணியாற்றி வந்தவர் கந்தாசாமி (60). தனி தொகுதியான வால்பாறை சட்டமன்ற தொகுதில் 2021 ஆம் ஆண்டு அதிமுக சார்பாக போட்டியிட்டு வென்றவர். வால்பாறை சட்டமன்ற உறுப்பினராகவும், அதிமுக கழக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளருமாக TK அமுல் கந்தசாமி பணியாற்றி வந்தார். எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளராக இருந்த அவர், அதிமுக கட்சியில் தீவிரமாக களப்பணியாற்றி வந்தார். இந்த நிலையிலே, உடல் உறுப்பு தொற்றினால் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை தரப்பட்டு வெண்டிலேட்டரில் கண்காணிக்கப்பட்டு வந்தார். தீவிரமான சிகிச்சை தரப்பட்டு வந்த நிலையில், திடீரென அவர் காலமானார். இந்நிலையில் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை, தேர்தலுக்கு முந்தைய ஓராண்டுக்குள், எம்எல்ஏ மறைந்தால் இடைத்தேர்தலுக்கு வாய்ப்பில்லை. தமிழக சட்டமன்ற பதவிக்காலம் மே 9ஆம் தேதி முடிவடையும் நிலையில், இடைத்தேர்தல் தேவையில்லை என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை - தேர்தல் ஆணையம் வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி உறுப்பினராக பணியாற்றி வந்தவர் கந்தாசாமி (60). தனி தொகுதியான வால்பாறை சட்டமன்ற தொகுதில் 2021 ஆம் ஆண்டு அதிமுக சார்பாக போட்டியிட்டு வென்றவர். வால்பாறை சட்டமன்ற உறுப்பினராகவும், அதிமுக கழக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளருமாக TK அமுல் கந்தசாமி பணியாற்றி வந்தார். எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளராக இருந்த அவர், அதிமுக கட்சியில் தீவிரமாக களப்பணியாற்றி வந்தார். இந்த நிலையிலே, உடல் உறுப்பு தொற்றினால் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை தரப்பட்டு வெண்டிலேட்டரில் கண்காணிக்கப்பட்டு வந்தார். தீவிரமான சிகிச்சை தரப்பட்டு வந்த நிலையில், திடீரென அவர் காலமானார்.

இந்நிலையில் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை, தேர்தலுக்கு முந்தைய ஓராண்டுக்குள், எம்எல்ஏ மறைந்தால் இடைத்தேர்தலுக்கு வாய்ப்பில்லை. தமிழக சட்டமன்ற பதவிக்காலம் மே 9ஆம் தேதி முடிவடையும் நிலையில், இடைத்தேர்தல் தேவையில்லை என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.


