"பிரதமர் மோடியை வரவேற்க கட்சி நிர்வாகிகள் யாரும் வர வேண்டாம்"- டெல்லி பாஜக தலைமை

 
மோடி தியானம்

கன்னியாகுமரிக்கு வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க கட்சி நிர்வாகிகள் யாரும் வர வேண்டாம் என தமிழக பாஜகவினருக்கு டெல்லி பாஜக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. வருகிற  ஜூன் 1-ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைகிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. இந்நிலையில்  கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் இன்று தியானம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து இன்று மாலை 4.35 மணிக்கு கன்னியாகுமரி செல்கிறார் பிரதமர். பகவதியம்மன் கோயிலில் வழிபாட்டிற்கு பின் மாலை 6 மணி அளவில் விவேகானந்தர் மண்டபத்திற்குச் சென்று 3 நாட்கள் தியானத்தில் ஈடுபடவுள்ளார். 

gg


இந்நிலையில் கன்னியாகுமரிக்கு வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க கட்சி நிர்வாகிகள் யாரும் வர வேண்டாம் என தமிழக பாஜகவினருக்கு டெல்லி பாஜக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரதமரின் தனிப்பட்ட தியான நிகழ்வை  அரசியல் கட்சி நிகழ்வாக மாற்றக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோருக்காக, விடுதியில் அறைகள் புக் செய்யப்பட்டிருந்த நிலையில் டெல்லி பாஜக தலைமையின் உத்தரவால் அறைகள் புக் செய்யப்பட்டது ரத்து செய்யப்பட்டது.