இந்த ஆட்சியை யாரும் கவிழ்க்க வேண்டியதில்லை, தானாகவே கவிழ்ந்துவிடும் - இபிஎஸ் விமர்சனம்..!!

 
Q

எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:... 

அதிமுகவிடம் இப்போது 41 எம்எல்ஏக்கள் தான் உள்ளனர். குறைவான 41 எம்எல்ஏக்களை வைத்துக் கொண்டு எப்படி தவெக ஆட்சியை கவிழ்க்க முடியும்? ஆனாலும் செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.

இப்படி இருந்தால் ஆட்சி தானாகவே கவிழ்ந்து போய்விடும். ஏன் என்றால் இன்றைக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது.

விலைவாசி உயர்வு விண்ணை முட்டுகிறது. மேகதாது பிரச்னைக்கு முதல்வர் வாயே திறக்க மாட்டேன் என்கிறார். நிர்வாக கோளாறு உள்ளது.

நமக்கு வரக்கூடிய தொழிற்சாலைகள் அனைத்தும் அண்டை மாநிலங்களுக்கு போய் கொண்டு இருக்கிறது.இந்த ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் என்ன திட்டத்தை கொண்டு வந்து மக்கள் நன்மை பெற்று இருக்கின்றனர்? எனவே இந்த ஆட்சி மீது மக்களுக்கு ஒரு வெறுப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. அதனால் இந்த ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும். யாரும் கவிழ்க்கவேண்டிய அவசியமே இல்லை.

தமிழகத்தில் நிறைய பாலியல் சீண்டல் வழக்குகள் பதிவாகிக் கொண்டே இருக்கின்றன. சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் இடைக்கால தீர்ப்பு வந்திருக்கிறது. இறுதி தீர்ப்பு வந்த பின்னரே கருத்து கூற முடியும்.

செஞ்சி சிறுமி விவகாரத்தில் முதல்வர் இதுவரை எதுவும் பேசவில்லை. தொழில் முதலீட்டை ஈர்க்கும் சக்தி தவெகவுக்கு இல்லை.