“டிடிஎஃப் வாசனால் யாரும் பாதிக்கப்படவில்லை... ஜாமின் வழங்குக” நீதிமன்றத்தில் வாதம்

 
 விபத்தில் சிக்கிய யூடியூபர் டிடிஎஃப் வாசன்

செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய வழக்கில், டிடிஎஃப் வாசனை போலீசார் மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஜாமின் கோரிய டிடிஎஃப் வாசனின் மனு மீதான விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது


அப்போது டிடிஎஃப் வாசன் தரப்பு வழக்கறிஞர், “டிடிஎஃப் வாசனால் எந்தவொரு தனிமனிதனும் பாதிக்கவில்லை, புகாரும் அளிக்கவில்லை. சென்னையில் இருந்து சென்ற போது எந்த காவலரும் விதிமீறல் குறித்து பார்க்கவில்லையா? கடந்த 15-ஆம் தேதி வீடியோவை பார்த்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். டிடிஎஃப் வாசனால் பொதுமக்கள் எந்த பாதிப்பும் அடையவில்லை. காவலர் கொடுத்த புகாரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வாசனுக்கு முதுகுவலி உள்ளது, கண்ணாடி அணிந்து தான் வெளியே செல்ல முடியும். வரும் 4ஆம் தேதி சினிமா பட சூட்டிங் உள்ளது, எனவே நிபந்தனை ஜாமின் வழங்க வேண்டும். வாசன் வளரும் இளைஞர், படத்தில் நடிக்க உள்ளார். வீடியோவுக்கு மன்னிப்பு கூட கேட்கிறோம். தலைக்கவசம் வழங்குவது, மழை வெள்ளத்தில் ஏழைகளுக்கு உணவு வழங்குவது ஆகியவற்றை செய்துள்ளார்” என்றார். கார் ஓட்டுநர் உரிமம் பெற LLR மட்டுமே வைத்துள்ள வாசன், தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தை இயக்கியுள்ளார் என அரசுத்தரப்பு வாதத்தை எடுத்துரைத்தது. இதனை கேட்ட நீதிபதிகள் உணவு இடைவேளைக்காக விசாரணையை ஒத்திவைத்தனர்.

யூடியூபர், பைக் ரேஸருமான டிடிஎப் வாசன் கடந்த 15 ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி பகுதிக்கு காரில் வந்த அவர், செல்போனில் பேசிக் கொண்டே காரை ஓட்டியுள்ளார்.இதுதொடர்பான வீடியோவை Twin Throttlers என்ற ID ல் YOUTUBE சேனலில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் மதுரை அண்ணா நகர் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் . கவனக்குறைவாக வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது .