இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது - அதிமுக ட்வீட்..!
அதிமுக ஐடி விங்க் வெளியிட்ட எக்ஸ் பதிவில், எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும் என ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.
கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது. இனி நமக்குள் பிரிவில்லை. இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை. நம் இலக்கு ஒன்றுதான். அது கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலை கொடி பறப்பது மட்டுமே. நாளை நமதே, தமிழ்நாடும் நமதே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வேலுமணி அணியை சேர்ந்த நத்தம் விஸ்வநாதன், அருண்மொழித் தேவன், ஹரி, தங்கமணி ஆகியோர் பழனிசாமியுடன் பேசினர். இதனையடுத்து இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதை வெளிப்படுத்தும் விதமாக, அதிமுக ஐடி விங்க் இந்த பதிவினை வெளியிட்டுள்ளது.
" எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும் “
— AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK (@AIADMKITWINGOFL) May 27, 2026
- அம்மா
கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது!
இனி நமக்குள் பிரிவில்லை...
இந்த எஃகு கோட்டையை… pic.twitter.com/irmekC9pu6

