காவல் நிலையம் செல்ல தேவையில்லை... ஆன்லைனில் இ-சிஎஸ்ஆர் பெற புதிய வசதி அறிமுகம்!

 
காவல் நிலையம் செல்ல தேவையில்லை... ஆன்லைனில் இ-சிஎஸ்ஆர் பெற புதிய வசதி அறிமுகம்!

பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு நேரில் செல்லாமல், இணையதளம் வாயிலாகப் புகார்களைப் பதிவு செய்து, அதற்கான மின்னணு சமூக சேவைப் பதிவேடு e-CSR  (Electronic Community Service Register) ரசீதைப் பெறும் வகையில் புதிய இணையவழிச்சேவையை இன்று (18.11.2026) டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் துவக்கிவைத்தார்.

Image

தமிழ்நாட்டில் பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு செல்லாமலேயே இ-சிஎஸ்ஆர் (e-CSR) ரசீதை இணையதளம் மூலம் பெறலாம். இதுவரை, புகார் அளிப்பவர்கள் CSR ரசீதைப் பெற காவல் நிலையத்திற்கு நேரில் செல்ல வேண்டியிருந்தது. புதிய வசதி மூலம், இருக்கும் இடத்திலிருந்தே ஆன்லைனில் புகார் பதிவு செய்து மின்னணு ரசீதை பெற்றுக்கொள்ளலாம். www.police.tn.gov.in இணையதளம் மூலம் கிடைக்கும். இதன்மூலம் பொதுமக்களின் நேரமும் அலைச்சலும் மிச்சமாகும். புகார்கள் மீதான நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையும் விரைவும் அதிகரிக்கும்.