இனி ‘அகதிகள் முகாம்’ வேண்டாம்..!! முதல்வர் ஸ்டாலின் பதிவு..!!

 
MK stalin letter MK stalin letter


மனிதத்தைக் கொல்லும் போர்களால் வாழ்விழந்து ஏதிலிகளாய் புலம்பெயர்ந்தவர்களை அன்பால் அரவணைப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

உலகம் முழுவதும் இன்று உலக அதிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இது உலகெங்கிலும் வாழும் அகதிகளை கௌரவிக்கும் விதமாக ஐக்கிய நாடுகள் சபையால்  ஜூன் 20  ‘உலக அகதிகள் தினம்’கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் உலக அகதிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “பொல்லாத போர்களின் மோசமான விளைவே நாடற்ற மனிதர்கள்” என்று  பதிவிட்டுள்ளார்.  

அகதிகள்

அவரது பதிவில், “பொல்லாத போர்களின் மோசமான விளைவே நாடற்ற மனிதர்கள்!

மனிதத்தைக் கொல்லும் போர்களால் வாழ்விழந்து ஏதிலிகளாய் புலம்பெயர்ந்தவர்களை அன்பால் அரவணைப்போம்!

நமது திராவிட மாடலில் இல் “அகதிகள் முகாம்” என்பதை “மறுவாழ்வு முகாம்” எனப் பெயர் மாற்றி, அன்னைத் தமிழ் உறவுகளின் மாண்பைப் போற்றினோம்! வாழ்வாதாரத்தையும் வாழ்வுரிமையையும் பாதுகாக்கிறோம்!

போரை மாய்ப்போம்! மனிதம் காப்போம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.