“இந்த மருந்தை 9 வயதுக்குடைய சிறுவர்களுக்கு கொடுக்கவே கூடாது”- WHO எச்சரிக்கை

 
ச்

9 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உடல் பருமனுக்கு எடை குறைப்பு மருந்துகள் அல்லது அறுவை சிகிச்சை வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Childhood Obesity,2023 world obesity Day : உடல் பருமன், குண்டு குழந்தைங்க  உங்க வீட்லயும் உருவாகலாம், என்ன செய்வது, எப்படி தடுப்பது? - world obesity  day what are the complication ...

பொதுவாக ஒபிசிட்டி பிரச்சினையால் சிறுவர் முதல் பெரியவர் வரை அவதி படுகின்றனர். சிலருக்கு உடல் தொப்பை போட்டு உடல் பருமன் கூடிக்கொண்டே போகும். ஆரோக்கியமான வாழ்வுக்கு ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பது மிகவும் முக்கியம். நம்முடைய உயரத்துக்கு ஏற்ற உடல் எடையை பராமரிப்பதன் மூலம் உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் வருவதிலிருந்து தப்பிக்க முடியும். குழந்தைகள் விளையாடுவது குறைந்து செல்போன் பார்க்கும் பிரச்சனை அதிகரித்ததில் இருந்து குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை அண்மை காலமாக அதிகரித்துவிட்டது. அதற்காக மருத்துவர்களையும், பல்வேறு மருந்துகளையும் சிலர் நாடுவது உண்டு.

இந்நிலையில் 9 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உடல் பருமனுக்கு எடை குறைப்பு மருந்துகள் அல்லது அறுவை சிகிச்சை வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு உணவு, உடற்பயிற்சி உள்ளிட்ட வாழ்க்கைமுறை பழக்கங்களை மாற்றுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். 10-19 வயதினரில் கடுமையான உடல் பருமனுடன் சர்க்கரைநோய், இன்சுலின் எதிர்ப்பு, கட்டுப்படுத்த முடியாத உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் இருந்தால் மட்டுமே மருந்து அல்லது அறுவை சிகிச்சையைத் தேர்ந்தெடுக்கலாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.