எப்படி போட்டாலும் அடி..! சாதனை படைத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்..!

 
1

8வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்   அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரு அணிகளும், கடந்த சீசனில் இரு முறை மோதின. அதில் மும்பை அணியை வெற்றி பெற்றது.இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், ஹைதராபாத் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் தோல்வியை தழுவி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார்.இதைத் தொடர்ந்து டிராவிஸ் ஹெட் மற்றும் மாயங்க் அகர்வால் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

டிராவிஸ் ஹெட் தனது அதிரடி ஆட்டத்தால் மும்பை இந்தியன்ஸ் அணியை கலங்க வைத்து 18 பந்துகளில் அரைசதம் அடித்தார்.சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வரலாற்றில் இதுவே அதிவேக அரைசதம் ஆகும். இந்த சாதனையை ட்ராவிஸ் ஹெட் செய்து முடித்த 22 நிமிடங்களில் மற்றொரு இளம் அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா 16 பந்துகளில் அரைசதம் அடித்து அந்த சாதனையை முறியடித்தார்.இருவரும் போட்டி போட்டு சிக்ஸ், ஃபோர் அடித்து அரைசதம் கடந்தனர்.
 

ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் 10 ஓவர்களுக்கு அதிக ரன்கள் (148 ரன்கள்) குவித்த முதல் அணி என்ற பெருமையை பெற்றது சன்ரைசஸ் ஹைதராபாத் அணி.இந்நிலையில் 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்து அபரா சாதனை படைத்துள்ளது. 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்க உள்ளது.