‘எவ்வளவோ மிரட்டியும் அவரை வெல்ல முடியவில்லை.. செந்தில் பாலாஜியின் மன உறுதிக்கு பாராட்டு’ - செல்வப்பெருந்தகை..
உச்ச நீதிமன்றத்தின் முடிவு உண்மைக்கு கிடைத்த வெற்றி என்றும், சர்வாதிகாரத்துக்கான வீழ்ச்சி என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ பொய்யான குற்றச்சாட்டுகள், வழக்குகள் மூலம் உண்மையை அதிக நாட்கள் சிறையில் அடைக்க முடியாது பிரதமர் மோடி அவர்களே! ஆட்சியில் உள்ளவர்களின் பழிவாங்கும் போக்கையும், சர்வாதிகாரத்தையும் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அமலாக்கத்துறை ஆதாரமில்லாமல் முன்னாள் அமைச்சர் திரு செந்தில்பாலாஜி அவர்களை வேண்டுமென்றே சிறையில் அடைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உறுதியாக நம்பியதால் அவருக்கு பிணை வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் முடிவு உண்மைக்கு கிடைத்த வெற்றி; சர்வாதிகாரத்துக்கான வீழ்ச்சி.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு இந்த தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும். முன்னாள் அமைச்சர் திரு.செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையின் மீது வைத்திருந்த நம்பிக்கையாலும், கட்சியின் மீது கொண்டுள்ள ஆழமான பிடிப்பாலும் எவ்வளவோ மிரட்டியும் அமலாக்கத்துறையால் அவரை வென்றெடுக்க முடியவில்லை. நீதியின் மீது நம்பிக்கை வைத்து போராடிய முன்னாள் அமைச்சர் திரு.செந்தில்பாலாஜி அவர்களின் மனஉறுதியை பாராட்டுகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் முடிவு உண்மைக்கு கிடைத்த வெற்றி; சர்வாதிகாரத்துக்கான வீழ்ச்சி.
— Selvaperunthagai K (@SPK_TNCC) September 26, 2024
பொய்யான குற்றச்சாட்டுகள், வழக்குகள் மூலம் உண்மையை அதிக நாட்கள் சிறையில் அடைக்க முடியாது பிரதமர் மோடி அவர்களே!
ஆட்சியில் உள்ளவர்களின் பழிவாங்கும் போக்கையும், சர்வாதிகாரத்தையும் அனைவரும் பார்த்துக்…