எனக்கு எத்தனை கோடி கொடுத்தாலும் இதை மட்டும் செய்ய மாட்டேன்! - ஜி.வி.பிரகாஷ்..!
சென்னை வண்டர்லாவில் புதிதாக, ஸ்கை வீல் எனப்படும் ஒரு ராட்டினத்தைத் தொடங்கி வைத்தார் ஜி.வி. பிரகாஷ்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்பட்டாலும், குறிப்பிட்ட சில விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்" எனப் பேசியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர், "மதுபானங்கள், சூதாட்டம் அல்லது குளிர்பானங்கள் போன்ற மக்களின் உடல்நலத்திற்கும், வாழ்க்கைக்கும் தீங்கு விளைவிக்கும் எந்தவொரு பொருளையும் நான் விளம்பரப்படுத்த விரும்பவில்லை.
இதற்கு முன் நிறைய குளிர்பானங்களுக்கு விளம்பரம் செய்யக் கூப்பிட்டிருக்கிறார்கள்.
ஆனால், அவர்கள் எவ்வளவு பெரிய தொகையைச் சம்பளமாக வழங்க முன்வந்தாலும், அதில் நான் நடிக்க மாட்டேன். இதுபோல நிறைய முறை நான் நிராகரித்திருக்கிறேன்.
இந்த பொழுதுபோக்கு பூங்கா, குடும்பத்திற்கானது என்பதனால் இங்கு வந்திருக்கிறேன். பொறியாளர்களும் உடன் இருக்கிறார்கள் என்பதனால்தான் இங்கு வந்திருக்கிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.

