தேர்வு கிடையாது : ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அலுவலக உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.39,900

 
1 1
நிறுவனம் இந்து சமய அறநிலையத் துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 04
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப தேதி 18.12.2025
கடைசி தேதி 20.01.2026

1. பதவி: தட்டச்சர்

சம்பளம்: மாதம் ரூ.15,300 முதல் ரூ.48,700 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான தகுதி.

தட்டச்சில் அரசு தொழில்நுட்ப தேர்வில் தேர்ச்சி: தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதல்நிலை (அல்லது) தமிழில் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (அல்லது) ஆங்கிலத்தில் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை

கணினி பயன்பாடு மற்றும் அலுவலக தானியக்கத்தில் சான்றிதழ் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட இணையான தகுதி.

2. பதவி: பிளம்பர்

சம்பளம்: மாதம் ரூ.12,600 முதல் ரூ.39,900 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: பிளம்பர் பாடப்பிரிவில் அரசு /அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனம் வழங்கிய தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

3. பதவி: அலுவலக உதவியாளர்

சம்பளம்: மாதம் ரூ.12,600 முதல் ரூ.39,900 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: எட்டாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான தகுதி

4. பதவி: மின்பணியாளர்

சம்பளம்: மாதம் ரூ.12,600 முதல் ரூ.39,900 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் மின்சார வாரிய தொழில்துறை பயிற்சி (ITI)  பயின்றதற்கான சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். மின்சார உரிமம் மாறியதால் வழங்கப்பட்ட B சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும்

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.12.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.01.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பப் படிவம் மற்றும் நிபந்தனைகளை https://hrce.tn.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

செயல் அலுவலர், அருள்மிகு ஆதிவ்யாதிஹா பக்த ஆஞ்சநேயர் திருக்கோயில், நங்கநல்லூர், சென்னை-61.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 07.01.2026 அன்று மாலை 5.45 மணி வரை மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும். அதன் பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.