ரூ.2000 நோட்டுக்களை மாற்ற எந்த ஆவணமும் தேவையில்லை - எஸ்.பி.ஐ அறிவிப்பு..

 
ரூ.2000 நோட்டுக்களை  மாற்ற எந்த ஆவணமும்  தேவையில்லை - எஸ்.பி.ஐ  அறிவிப்பு..

ரூ.2000 நோட்டுக்களை  மாற்ற எந்த ஆவணமும்  தேவையில்லை என எஸ்.பி.ஐ அறிவித்துள்ளது.  

கடந்த 19ம் தேதி ரூ.2000 நோட்டுகள் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அத்துடன் மே 23ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை தினமும் ரூ.20 ஆயிரம் வரை வங்கியில் சென்று மாற்றிக்கொள்ளலாம் என்றும், செப்டம்பர் 30ம் தேதிக்குப் பின்னர் ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்றும் கூறியிருந்தது. இதனையடுத்து பொதுமக்கள்  தங்களிடம் இருக்கும் ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கிகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.

sbi

இந்நிலையில் ரூ. 2000 நோட்டுக்களை மாற்ற எந்த ஆவணமும் தேவையில்லை என எஸ்.பி.ஐ அறிவித்துள்ளது.  அத்துடன் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற எந்த படிவமும் நிரப்பி கொடுக்க தேவையில்லை எனவும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி தெரிவித்திருக்கிறது.  வாடிக்கையாளரிடம் படிவமோ, அடையாள ஆவணமோ கேட்காமல் ரூ.2000 நோட்டுக்களை மாற்ற அனைத்து கிளைகளுக்கு எஸ்.பி.ஐ உத்தரவு பிறப்பித்துள்ளது.  ஏற்கனவே படிவம் நிரப்பி தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், அதனை மாற்றி மீண்டும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.