நவ.15 வரை தமிழ்நாட்டுக்கு புயல் கிடையாது- வானிலை ஆய்வு மையம்

 
5 கி.மீ. வேகத்தில் நகரும் கஜா புயல்: வானிலை ஆய்வு மையம்

வருகிற 7 ஆம் தேதிக்கு பின்னர் தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "வங்க கடலில் நிலை கொண்டுள்ள முரசு புயல் தீவிர புயலாக மாறியது. இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை 4 மணிக்குள் ஆந்திராவின் நரசாப்பூர் அருகே புயல் கரையை கடக்கும்.  முரசு புயல் கரையை கடக்கும்போது 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். 

வருகிற 7 ஆம் தேதிக்கு பின்னர் தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பொழியக்கூடும். இந்த நவம்பர் மாதத்தில் மேலும் புயல்கள் உருவாகும்.   இந்த மாதத்தில் உருவாகும் புயல்கள் சென்னையில் கரையை கடக்கக்கூடும். நவ.15 வரை தமிழ்நாட்டுக்கு புயல் கிடையாது. சென்னை மற்றும்  திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று (நவ.02) பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மணிக்கு 75 கி.மீ வேகம் வரை சூறாவளிக்காற்று வீசும். செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, விழுப்புரம் மாவட்டங்களிலும் இன்று சூறாவளிக்காற்று வீசும். திருப்பதி, நெல்லூர், சித்தூர், பாபட்லா, பிரகாசம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று அதிக கணமழைக்கான வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட்  விடுக்கப்பட்டுள்ளது" என்றார்.