5 வயது வரை இனி அரசுப் பேருந்துகளில் கட்டணம் இல்லை- போக்குவரத்துத் துறை அறிவிப்பு..
Thu, 5 May 20221651754278761

5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இனி அரசுப் பேருந்துகளில் கட்டணம் கிடையாது என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்துத்துறை, சுற்றுலாத்துறை , கலை மற்றும் பண்பாட்டுத் துறைகள் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது போக்குவத்துறை மானியக் கோரிக்கை மீது அமைச்சர் எஸ். எஸ்.சிவசங்கர் பதிலுரை ஆற்றினார். அப்போது ,
- “தற்போது 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரைக்கட்டணத்தில் பயணசீட்டு வழங்கப்படுகிறது. இனி அனைத்து வகை அரசு பேருந்துகளிலும் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது.
- தானியங்கி பயணச் சீட்டு வழங்கும் முறை, பண பரிவர்த்தனையற்ற பயணச்சீட்டு முறை அறிமுகப்படுத்தப்படும்.
- பள்ளி வாகனங்களுக்கு முன், பின் புறங்களில் கேமராவுடன், சென்சார் கருவி பொருத்தும் வகையில் சிறப்பு விதிகள் கொண்டுவரப்படும்.
- விழா நாட்கள் நீங்கலாக இணையவழியில் இரு வழி பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10% கட்டண தள்ளுபடி வழங்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
- அரசுப் பேருந்துகளில் கேமரா பொருத்தி, மத்திய கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கும் பணி விரிவுப்படுத்தப்படும். ”
- அதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் 106.34 கோடி முறை இத்வரை பெண்கள் இலவச பேருந்து பயணம் செய்துள்ளதகாகவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.