"செங்கல்பட்டில் குழந்தைகள் கடத்தப்படவில்லை" : விசாரணையில் வெளியான உண்மை!!

 
tt

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஒழலூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் வேலன்.  இவருக்கு ஆர்த்தி  என்ற மனைவியும்,  ரட்சிதா என்ற 11 வயது மகளும் நித்தின் என்ற ஏழு வயது மகனும் உள்ளனர்.  கடந்த ஓராண்டுக்கு முன்பு வேலன் மற்றும் ஆர்த்தி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆர்த்தி கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.  

ff

இருப்பினும் குழந்தைகள் தந்தையின் பராமரிப்பில் ஒழலூர் ஊராட்சியில் அரசு ஆதிதிராவிட நடுநிலைப் பள்ளியில் படித்து வந்துள்ளனர்.  ரட்சிதா மற்றும் நித்தின் ஆகிய இருவரும் நேற்று காலை வழக்கம்போல பள்ளிக்கு சென்று நிலையில் மதிய உணவு இடைவெளியில் அடையாளம் தெரியாத நபர்கள் அவர்களை காரில் கடத்தி சென்றதாக கூறப்பட்டது.  இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார்.  புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை நடத்தினர்.  குறிப்பாக ஆர்த்தியிடம் காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்றது.  

police

இந்நிலையில் செங்கல்பட்டில் குழந்தைகள் காரில் கடத்தப்படவில்லை அழைத்து சென்றது தாய் என்பது தெரியவந்துள்ளது.  தம்பதியர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் மண் நிலையில் குழந்தைகளை தாய் அழைத்துச் சென்றுள்ளார்.  நண்பரின் காரில் குழந்தைகளை தாய் அழைத்துச் சென்றதாக தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன் செங்கல்பட்டு போலீசார், மாணவர்கள் இருவரையும் மீட்டனர் தாய் ஆர்த்தி மற்றும் குழந்தைகள் இருவரையும் காவேரிப்பாக்கத்தில் மீட்ட போலீசாார், செங்கல்பட்டு காவல் நிலையம் அழைத்து வருகின்றனர்.