செல்போன்களை பாதுகாக்க கட்டணம் இல்லை- கோவில் நிர்வாகம் அறிவிப்பு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 1-ம் தேதி முதல் செல்போன் கொண்டு செல்ல தடை உள்ள நிலையில் செல்போன்களை பாதுகாக்க கட்டணம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கடந்த சில மாதங்களாகவே பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து விடுமுறை நாட்களில் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் கிரிவலம் மற்றும் அண்ணாமலையாரை தரிசித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் செப்டம்பர் 1 முதல் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. செல்போன் கொண்டு செல்ல தடை உள்ள நிலையில் செல்போன்களை பாதுகாக்க கட்டணம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.5 கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதால் செல்போன்களை கவுன்ட்டர்களில் இலவசமாக ஒப்படைத்து செல்லலாம் என கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

