தமிழக அமைச்சரவையில் மாற்றம் இல்லை - முதல்வர் விஜய் திட்டவட்டம்
2027-28 பட்ஜெட் தாக்கலில் கவனம் செலுத்துங்கள்,அமைச்சரவை மாற்றம் என சொல்வது குறித்து எல்லாம் கவலை வேண்டாம் என அமைச்சர்களிடம் முதலமைச்சர் விஜய் சமீபத்தில் கூறியுள்ளார்.

2027-28 பட்ஜெட் தாக்கலில் கவனம் செலுத்துங்கள்,அமைச்சரவை மாற்றம் என சொல்வது குறித்து எல்லாம் கவலை வேண்டாம் என அமைச்சர்களிடம் முதலமைச்சர் விஜய் சமீபத்தில் கூறியுள்ளார். அமைச்சரவை மாற்றம் குறித்த வதந்திகளைக் கண்டு கவலைப்பட வேண்டாம் என அமைச்சர்களிடம் முதலமைச்சர் விஜய் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். வரும் 2027-28 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலில் மட்டுமே முழு கவனம் செலுத்தவும், அது முழுக்க முழுக்க மக்களுக்கான பட்ஜெட்டாக இருக்கும் வகையில் வடிவமைக்கவும் அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
அண்மையில் அமைச்சரவை மாற்றம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் கசிந்தது. நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் அமைச்சர் ராஜ்மோகனிடம் ஒப்படைக்கப்படலாம் என்றும், அமைச்சர்கள் சரத், ஜெகதீஸ்வரி, விஜய் தமிழன் பார்த்திபன் ஆகியோர் பதவிகளை இழக்க நேரிடும் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடதக்கது.

