ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை..!!
Apr 8, 2026, 10:33 IST1775624626603
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதம் என்ற நிலையில் நீடிக்கும் என தெரிவித்தார்.
ஈரான் போரால் உலக பொருளாதாரத்தில் நிலைத்தன்மை இல்லை என்றும் எனினும் இந்தியாவின் பொருளாதார ஆதாரங்கள் வலுவாக உள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
இதன் மூலம், வீட்டு கடன் உள்ளிட்ட்வற்றுக்கான வட்டி விகிதம் உயராது. மாதாந்திர தவணைகளை கூடுதலாக செலுத்த வேண்டிய அவசியமும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.



