"பேனர்கள் வேண்டாம்... ஆரவாரம் கூடாது!" - த.வெ.க. தொண்டர்களுக்கு த.வெ.க. அதிரடி உத்தரவு..!

 
1

திரையுலகில் வெற்றிகரமான நடிகராக உச்சம் தொட்டு சாதித்த விஜய், கடந்த 2024 பிப்ரவரி 2ல் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். முதல் தேர்தலிலேயே 108 இடங்களில் அபாரமான வெற்றி பெற்று, காங்., - வி.சி.க., - கம்யூனிஸ்ட்டுகள், முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார்.

தமிழக அரசியலில் முன்னெப்போதும் இல்லாத சாதனையை படைத்துள்ள முதல்வர் விஜய், இன்று (ஜூன் 22) 52வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவர் முதல்வரான பின், வரும் முதல் பிறந்த நாள் என்பதால், இதை பெரும் திருவிழாவாக கொண்டாடி களிக்க த.வெ.க.,வினர் தயாராகி வந்தனர்.

அதே நேரத்தில், த.வெ.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் இந்த கொண்டாட்டம், மக்களுக்கு தொல்லையாக இருக்கக்கூடும் என, சமூக வலைதளங்களில் பலரும் கவலை தெரிவித்தனர்.

இதையடுத்து, த.வெ.க., நிர்வாகிகளுக்கு, அக்கட்சி தலைமை உத்தரவு ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், 'தலைவர் விஜயின் பிறந்த நாளை, மக்களுக்கு இடையூறு இல்லாமல் கொண்டாட வேண்டும். சாலைகளை மறித்து பேனர் வைக்க கூடாது. அமைதியாக, ஆரவாரம் இன்றி, எழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், யாரும் எவ்வித செயல்களிலும் ஈடுபட கூடாது. மாவட்டம், பேரூர், நகரம், கிளை, வார்டு அளவில், நிர்வாகிகள் தங்களால் இயன்ற அளவுக்கு, மாணவர்களுக்கும், முதியோருக்கும் உதவிகளை செய்ய வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.