"கேட்ட கேள்விகளுக்கு பதிலில்லை, வெறும் ஆக்டிங் தான்!" – முதலமைச்சர் விஜயை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
சட்டப்பேரவையில் முதல்வர் பதிலுரைக்கு பேச வாய்ப்பு அளிக்காததைக் கண்டித்து தி.மு.க எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக கூட்டணி கட்சியினரான மனிதநேய ஜனநாயக கட்சியின் உறுப்பினர் தமிமுன் அன்சாரி மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் உறுப்பினர் ஜவாஹிருல்லா ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்
சட்டப்பேரவையில் தனது பதிலுரையில் முதல்வர் விஜய், தி.மு.க.,வினர் மீது ஆதாரம் இல்லா குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் என வெளிநடப்பு செய்த பின் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்..முதலமைச்சர் பேசி முடித்ததும் நாங்கள் பேச வாய்ப்பு கேட்டோம். முதலில் தருவதாக சொன்னார். பிறகு என்ன பிரஷர் வந்ததோ... முதலமைச்சர் முடிவா, இல்லை அமைச்சர்கள் யாரேனும் சொன்னார்களா என்று தெரியவில்லை. திடீரென்று சபாநாயகர் நாங்கள் பேசுவதற்கு அனுமதி மறுத்துவிட்டார் என வெளிநடப்பு செய்த பின் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்
கொடநாட்டில் தனது பட ரிலீஸாக்காக வாட்ச்மேன் வேலை பார்த்தவர்தான் இந்த முதலமைச்சர். இவருக்கு மிசாவைப் பற்றி, எங்கள் தலைவரைப் பற்றி பேச 1% கூட தகுதி இல்லை.
15 கேள்விகள் முதல்வரிடம் கேட்டிருந்தேன்; டைவர்ஷன் இல்லாமல் நேரடியாக பதில் சொல்ல கூறினேன். ஆனால் அதே ஆக்டிங், பஞ்ச் டயலாக் பேச்சுகள்; ரீல்ஸாக்காக மட்டுமே முதல்வர் பேசிவிட்டு சென்றுள்ளார்
நாங்கள் வைத்த ஒரு கேள்விக்கு கூட முதல்வர் பதில் சொல்லவில்லை...எங்கள் கேள்விகளுக்கு திங்கள்கிழமை பதில் சொல்வேன் எனக்கூறி சென்றவர் தயாராக வருவார் என நினைத்தேன்; மனப்பாடம் செய்துவிட்டு வந்து ஒப்புவித்தல் போட்டிபோல சட்டமன்றத்தில் பேசிவிட்டு சென்றுள்ளார்

