பாஜகவுடன் கூட்டணி இல்லை - ஈபிஎஸ்

 
eps

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மகளிர் நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியில் தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , "பா.ஜ.க. உடன் கூட்டணி முறிவு என்பது ஒரு மனதாக எடுக்கப்பட்ட முடிவு.  பா.ஜ.க. கூட்டணி முறிவு என்பது தொண்டர்களின் உணர்வு. எந்த கட்சியுடனும் கூட்டணி குறித்து மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. பாஜக உடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்"  என்றார்.

EPS

தொடர்ந்து பேசிய அவர் , "தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது; பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப்பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது; தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது போதைப்பொருட்களை கட்டுப்படுத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வேதனையானது;

eps

தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறிவிட்டதாக மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது  நிலைமை இப்படியிருக்க தமிழ்நாட்டு மக்களை நலமா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்பது சரியா? போலீஸ் அதிகாரியுடன் தொடர்பு வைத்துக்கொண்டு போதைப்பொருட்களை ஜாபர் சாதிக் கடத்தியுள்ளார் போதைப்பொருளை விற்போர் கைது செய்யப்படவில்லை; காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன; முக்கியமான பிரச்னையில் முதல்வர் பதிலளிக்காமல் ஆர்.எஸ்.பாரதி மூலம் பதிலளித்துள்ளார் " என்றார்.