பிஜு ஜனதா தளத்தோடு கூட்டணி இல்லை – பாஜக அறிவிப்பு..!

 
1

பாஜகவின் ஒடிசா மாநிலத் தலைவர் மன்மோகன் சமால் எக்ஸ் பக்கத்தில் அவர் இட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

ஒடிசாவில் கடந்த 10 ஆண்டுகளாக ஸ்ரீ நவீன் பட்நாயக் அவர்களின் தலைமையிலான பிஜு ஜனதா தள (பிஜேடி) கட்சி, தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த செயல்பாடுகளில் மத்தியில் அமைந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. அதற்காக நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எங்கெல்லாம் இரட்டை என்ஜின் அரசுகள் இருக்கின்றனவோ, அந்த மாநிலங்கள் அனைத்து துறைகளிலும் விரைவாக வளர்ச்சி அடைந்துள்ளன என்பதை எங்கள் அனுபவம் காட்டி உள்ளது. ஆனால் இன்று, மோடி அரசின் நலத்திட்டங்கள் ஒடிசாவின் அனைத்துப் பகுதிகளையும் சென்றடையவில்லை. அதனால், ஏழை சகோதர சகோதரிகளால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பலனை பெற இயலவில்லை.

நாங்கள் ஒடிசாவின் அடையாளம், ஒடிசாவின் பெருமை மற்றும் ஒடிசா மக்களின் நலன் தொடர்புடைய பல பிரச்சினைகளை கருத்தில் கொண்டுள்ளோம். ஒடிசாவின் 4.5 கோடி மக்களின் நம்பிக்கைகள், விருப்பங்களை நிறைவேற்ற, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் வளர்ச்சி அடைந்த இந்தியாவையும் வளர்ச்சி அடைந்த ஒடிசாவையும் உருவாக்க, பாரதிய ஜனதா கட்சி மக்களவைத் தேர்தலில் அனைத்து (21) தொகுதிகளிலும் , சட்டமன்றத்தில் அனைத்து (147) தொகுதிகளிலும் வெற்றி அடையும். பாஜக தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.