“தெரு நாய்களை பாதுகாக்க தானே ஓட்டு போட்டோம்”- நிவேதா பெத்துராஜ்
தெரு நாய்களை பாதுகாப்பது அரசின் கடமை, அதற்காகத்தானே வாக்களித்தோம் என நடிகை நிவேதா பெத்துராஜ் கூறியுள்ளார்.

சென்னையில் தெருநாய்களுக்கு ஆதரவான பேரணியில் பங்கேற்ற உரையாற்றிய நடிகை நிவேதா பெத்துராஜ், “தெரு நாய்களை பாதுகாப்பது அரசின் கடமை, அதற்காகத்தானே வாக்களித்தோம். அதிகரிக்கும் பிரச்சனைகளுக்கு தெருநாய்களை அடைத்து வைப்பதை விட, தடுப்பூசி போடுவது தான் தீர்வு. நாய் கடித்தால் அதை பெரிய விஷயமாக்கி பயத்தை உருவாக்கக்கூடாது. கண் முன்னே நிறைய விலங்குகளுக்கு எதிரான சம்பவங்கள் நடக்கிறத். அதனை தட்டிக் கேட்க யாரும் இல்லை.
நாய்களை பிடித்து தடுப்பூசி போட்டுவிட்டு மீண்டும் அதை அதே இடத்தில் விட வேண்டும். அதற்கு பதிலாக காப்பகம் அமைத்தால், அதில் நாய்கள் ஒன்றுக்கொன்று கடித்து இறந்துபோகும். அது நல்லது கிடையாது. மனிதர்களையே அடித்துக் கொல்லும்போது, விலங்குகள் மீது எப்படி கருணை வரும்? தெரு நாய்களைப் பாதுகாப்பது நமது கடமையும்தான்” என்றார்.

