போலீசாருடன் தகராறு செய்த நிவேதா பெத்துராஜ் - கார் டிக்கியில் இருந்தது என்ன?

 
f

தனது காரை பரிசோதனை செய்யவிடாமல் காவல்துறையிடம்  நடிகை நிவேதா  பெத்துராஜ் வாக்குவாதம் செய்த வீடியோ இணையதளத்தில் வைரலாகியுள்ளது. 

tt

பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார் இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியான ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக் ,திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன், பொன்மாணிக்கவேல் உள்ளிட்ட திரைப்படங்களில்  நடித்தார் .


இந்நிலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் நடிகை நிவேதா பெத்துராஜின் காரை வழிமறித்து சோதனை செய்துள்ளனர் . அப்போது கார் டிக்கியை  திறக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டதாக தெரிகிறது. அதற்கு நிவேதா பெத்துராஜ் தனது கார் டிக்கியை திறக்க முடியாது என்று கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் வீடியோ ரெக்கார்ட் செய்த நிலையில் அதை நிறுத்த கூறி தகராறு செய்துள்ளார். இதற்கான வீடியோ இணையதளத்தில் வைரலானது . கார் டிக்கியை திறந்து காட்ட முடியாது என்று நடிகை நிவேதா வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இருப்பினும் அந்த வீடியோவில் காவலர்கள் உடையில் இருந்தவர்கள் காலில் செருப்பு அணிந்திருந்ததை பார்த்த இணையவாசிகள் ,  பட புரமோஷனுக்காக நிவேதா பெத்துராஜ் இப்படி இறங்கி உள்ளார் என்று வசைப்பாடி வருகின்றனர் . இருப்பினும் இது படத்திற்கான புரமோஷனா ? இல்லையா  என்பது இதுவரை தெரியவில்லை.