பாஜக-வின் தேசியத் தலைவராக நிதின் நபின் நியமனம்..! யார் இவர்..?

 
1 1

பிஹார் மாநிலத்தில் பலமுறை சட்டமன்ற உறுப்பினராகவும், அரசு அமைச்சராகவும் மக்கள் பணியாற்றி, அனைத்துத் தரப்பினரின் நன்மதிப்பையும் பெற்றுள்ள நிதின் நபின்,பாஜக-வின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


45 வயதான நிதின் நபின், பாட்னாவில் பிறந்தவர். இவர் பாஜகவின் முதுபெரும் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான நபின் கிஷோர் பிரசாத் ஷின்ஹாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது தந்தை மறைவுக்கு பிறகு அரசியலில் நிதின் நபின் நுழைந்தார்.

பனிகாபூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு பிஹாரில் எம்எல்ஏ ஆனார். 2006-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 4 முறை எம்எல்ஏவாக இருக்கிறார்.

தற்போது பிஹாரில் நிதிஷ் தலைமையிலான கூட்டணி அரசில் சாலை போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கிறார் நிதின் நபின். பிஹாரில் பாஜக வெற்றிக்கு இவர் கடுமையான உழைப்பு செலுத்திய நிலையில் அவருக்கு பாஜக மேலிடம் மிகப்பெரிய பொறுப்பை அளித்துள்ளது. 

இந்நிலையில்  பாஜக தேசியத் தலைவராக இருந்த ஜேபி நட்டா பதவிக்காலம் முடிந்த நிலையில் தற்போது புதிய செயல் தலைவரக நிதின் நபின் நியமிக்கப்பட்டுள்ளார்.