பாஜகவோடு கூட்டணியில் சேருவதற்கு திமுக பேச்சுவார்த்தை- அமைச்சர் நிர்மல்குமார்

 
அ

திமுக ஆட்சியில் போலி பத்திரம் பதிவு செய்ய ஊருக்கு 2 பேர் வளர்க்கப்பட்டதாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “பட்ஜெட் தொடர்பாக மட்டுமே அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தவெக அரசு தவறுக்கு துணைபோகக் கூடியது அல்ல. தவறு செய்தவர்கள் மீது 100% நடவடிக்கை எடுக்கப்படும். தவெக ஆட்சியில் லாக்கப் மரணங்கள் மூடி மறைக்கப்படாது.  கடந்த ஆட்சிகளில் லாக்கப் மரணங்கள் மூடி மறைக்கப்பட்டன. லாக்கப் மரணங்களுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும். லாக்கப் மரண வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.    ` புழல் சிறையில் உடல்நிலை குறைவு காரணமாகவே கைதி மரணமடைந்தார். புழல் சிறையில் கைதி உயிரிழந்தது குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தப்படும்.  திமுக, அதிமுக, பாஜக இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்கின்றன. கூட்டணியில் சேருவது குறித்து பாஜகவோடு திமுக மற்றும் அதிமுக பேச்சுவார்த்தை நடத்துகிறது. எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசி ஆட்சியை கவிழ்க்க தினந்தோறும் முயற்சி செய்கின்றனர். ஒரு எம்.எல்.ஏவுக்கு ரூ.50 கோடி கொடுத்து விலைக்கு வாங்க முயற்சிக்கின்றனர். பாஜகவுடன் இணைந்து மத்திய அமைச்சரவையில் இடம்பெற திமுக முயற்சி செய்கிறது.

திமுக ஆட்சியில் போலி பத்திரம் பதிவு செய்ய ஊருக்கு 2 பேர் வளர்க்கப்பட்டனர். கடந்த ஆட்சியில் பத்திரப்பதிவுத்துறையில் லஞ்சம் புரையோடிபோய் இருந்தது. திமுக ஆட்சியில் ரூ.1 லட்சம் பத்திரப்பதிவு செய்தால் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு பதிவுத்துறை அலுவலகத்திலும் அமைச்சர் மூர்த்தி சார்பில் லஞ்சம் வசூலிக்க ஒருவர் இருந்தார். பத்திர பதிவுத்துறையை சீரமைக்கும் பணியில் தவெக அரசு தீவிரம் காட்டிவருகிறது” என்றார்.