"டிடிவி தினகரன் பேசாமல் இருப்பது நல்லது" - நிர்மல் குமார்
சதித் திட்டத்தால் தான் கரூர் துயரம் நடந்துள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மல் குமார், “எடப்பாடி பழனிசாமியை காலி செய்வேன் என்று கூறிதான் டிடிவி தினகரன் கட்சி ஆரம்பித்தார். ஆயிரக்கணக்கான தொண்டர்களை தினகரன் நடுத்தெருவில் விட்டிருக்கிறார். யாரை துரோகி என்றாரோ அவருடன் தினகரன் கூட்டணி அமைத்தார். கொஞ்சநாள் அவர் பேசாமல் இருக்கலாம். புரட்சித் தலைவர் MGR காலத்தில் கூட, அம்மா காலத்தில் கூட, திமுக இந்த அளவுக்கு ஒரு அழிவை சந்தித்ததே கிடையாது. தமிழக நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்படும். கரூரில் நெரிசலில் பலியானோர் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்கியதை யாராலும் தடுக்க முடியாது. சதித் திட்டத்தால் தான் கரூர் துயரம் நடந்துள்ளது. கரூரில் நெரிசல் சம்பவம் நடந்தபோது எஸ்பிக்கே தெரியாத விஷயம் செந்தில்பாலாஜிக்கு எப்படி தெரியவந்தது?
கரூரில் கோயிலுக்கு சொந்தமான 3,085 ஏக்கர் நிலத்தை பட்டா போட்டு கொடுத்ததாக நயினார் கூறியுள்ளார். 1963ல் இனாம் ஒழிப்பு சட்டத்தின் மூலம் அப்போதே அரசு சார்பில் பட்டா போட்டு கொடுக்கப்பட்ட இடங்கள்தான் அவை. 2-3 தலைமுறையாக சுமார் 10,000 குடும்பங்கள் அங்கே வாழ்ந்து வருகின்றனர். பட்டா மாறுதல் செய்யாமல் இருந்ததால், அதை ஒரு சிலர் கோயில் நிலம் எனக் கூறுகிறார்கள். அந்த பட்டாக்களை இப்போது ஒழுங்குபடுத்தியுள்ளோம். வேறு எந்த கோயில் நிலங்களையும் புதிதாக கொடுக்கவில்லை. 10,000 குடும்பங்களை வெளியேற்றுவதற்கு இந்த அரசு தயாராக இல்லை. இதை நயினார் புரிஞ்சிக்கணும்” என்றார்.

