அதானி குழும கடன் விவரங்களை வெளியிட முடியாது - மக்களவையில் நிர்மலா சீதாராமன் பதில்..

 
nirmala

அதானி குழும நிறுவனங்கள் பெற்ற கடன் விவரங்களை வெளியிட முடியாது என மக்களவையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அப்போது ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டுமென  பாஜகவினர் வலியுறுத்தியதால், எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.  பின்னர்  மக்களவையில் உறுப்பினர் தீபக் பாய்ஜ்,  அதானி குழும விவகாரம் குறித்தும், அதானி நிறுவனம் எல்.ஐ.சி.யிடம் அதானி குழுமம் ரூ.6347 கோடி கடன் பெற்றுள்ளது குறித்தும் கேள்வி எழுப்பினார்.  இதற்கு மத்திய  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார்.

adani

அதில், ஆர்பிஐ சட்ட விதிப்படி, எந்த ஒரு நிறுவனத்தின் கடன் விவரங்களையும் வெளியிட முடியாது என்றும், 1934 சட்ட விதிகளின்படி, பொது நிறுவனத்தின் கடன் விவரங்களை பொதுவெளியில் வெளியிட கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நிறுவனத்திற்கு கடன் வழங்கிய குறிப்பிட்ட வங்கியானது, கடன் விவரங்களை ரிசர்வ் வங்கிக்கு தெரிவித்துவிடும். அப்படி அளிக்கப்பட்ட ஆவணங்கள் பாதுக்கப்பாக வைத்து இறுக்கப்படும் என்று அதில்  குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் எல்ஐசி, அதானி நிறுவனத்திற்கு வழங்கிய கடனானது டிசம்பர் 31 வரையில் ரூ.  6,347 கோடி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்  பதில் அளித்துள்ளார்.