“மதத்தை ஒழிப்பேன் என அமைச்சர் பேசுவதா?"- நிர்மலா சீதாராமன் ஆவேசம்

தணிக்கைத் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பங்கு முக்கியமானது. தணிக்கையாளர்கள் தங்கள் பணியை திறமையாக செய்ய வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் தேவையானவற்றை வழங்கி வருகிறோம்.
சென்னையில் தணிக்கையாளர் சங்கத்தின் 90வது ஆண்டு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “ராமருக்கு அவமரியாதை செய்தபோது கூட, வன்முறையை கையாளவில்லை என்பதே சனாதனம். சனாதனம் குறித்து பேசியவர்கள், இதர மதங்கள் பற்றி பேசத் தயாரா? அமைச்சராக இருந்துகொண்டு ஒரு மதத்தை ஒழிக்க வேண்டுமென பேச யாருக்கும் உரிமையில்லை. எந்த மதத்திற்கும் எதிராக பேச கூடாது என உறுதிமொழி எடுத்து பதவியேற்ற அமைச்சர் பொதுமேடையில் இப்படி பேசுவது மிகவும் தவறு. அறநிலையத்துறையை காப்பாற்ற வேண்டிய அமைச்சரும் மேடையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். வாக்குவாதம் மூலம் வன்முறை, செயல்கள் மூலம் வன்முறை இருந்தாலும் ஆதரவு தர முடியாது. பிற மதங்களில் நடைபெறும் தவறுகள் குறித்து பேச தைரியம், முதுகெலும்பு உள்ளதா? என்ன பேசினாலும் எதுவும் செய்ய மாட்டோம் என்ற துணிச்சலில்தான் இவ்வளவு தைரியமாக பேசுகின்றனர்.
ராமருக்கு அவமரியாதை செய்ததுபோல, அதாவது ஹிந்து கடவுளை செருப்பால அடிச்ச மாதிரி இஸ்லாமிய கடவுளையோ, கிறிஸ்தவ கடவுளை அடிக்க தைரியம் வருமா? அரசியல் சாசனப்படி எந்த ஒரு மக்களுக்கும் விரோதம் வரும் அளவிற்கு பேசக்கூடாது என்பது அமைச்சராக இருப்பவர்களின் பொறுப்பு” என்றார்.