இந்தியா வளர்ச்சியை நோக்கிய சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது- நிர்மலா சீதாராமன்

 
nirmala

2028-ல் சீனாவை விட இந்தியாவில் இளைஞர்கள் அதிகம் இருப்பார்கள் எனவும்,  இந்தியா வளர்ச்சியை நோக்கிய சரியான பாதையில் சென்றுகொண்டிருப்பதாகவும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

Finance Minister Nirmala Sitharaman Pulls Up Bureaucrat For A Question He  Failed To Answer

செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூரில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பம் , வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் 10 வது பட்டமளிப்பு விழா இன்று நடைப்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அவர் முன்னிலையில் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. பதக்கங்களை பெற்ற மாணவர்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா  பதக்கங்களை வழங்கி பாராட்டினார். 

விழாவில்  பேசிய நிர்மலா சீதாராமன், “IIITDM தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனம், கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த மாணவர்களை உருவாக்கியுள்ளது. இந்த கல்வி நிறுவனத்தில், பல பேராசிரியர்கள் ஓய்வுப்பெற்ற பிறகும் அர்பணிப்போடு பணிபுரிந்து வருவதை சுட்டிக்காட்டி அவர்களுக்கு தலை வணங்குகிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு IITs, IIITDMs மட்டும் போதுமானதல்ல. Institute of eminence என்ற சிறப்பு அந்தஸ்து பெற்ற உயர்கல்வி நிறுவனங்களும் அவசியம் தேவை, உற்பத்தி நிறுவனங்களின் தேசமாக இந்தியா மாற வேண்டும்.

இந்தியா வளர்ச்சியை நோக்கிய சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. 2028-ல் சீனாவை விட, இந்தியாவில் உழைக்கும் வர்க்கத்தினர் அதிகம் இருப்பார்கள் என்று ஐ.நா. சபையின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இது இந்தியாவின் மிகப்பெரிய பலமாக இருக்கும். உலகளாவிய அளவில் தலைசிறந்த 58 நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இந்தியர்களே இருக்கின்றனர். வரும் காலங்களில் இதே நிலை தொடர மாணவர்கள் தங்கள் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் நிறுவனங்களில் வேலை செய்வதை விட தொழில் முனைவோர்களாக மாறி பலருக்கு வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும். மாணவர்களை உயர்க்கல்வி பயில அனுப்பும் பெற்றோர்களுக்கு தலை வணங்குகிறேன்” எனக் கூறினார்.