”சட்டசபையில அரசியல் செய்யாம வேற எங்க செய்றது? விஜய் குட்டி கதை சொன்னதுல தவறில்ல”- நிர்மலா சீதாராமன்
தமிழகத்திற்கு நிதி நிலுவை எதுவும் இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “கடன் வாங்குவது தவறில்லை. கடன் வாங்கி சொத்து உருவாக்குவதில் எவ்வித தவறும் இல்லை. கடனாக வாங்கும் தொகையை வெறுமனே நலத்திட்டங்களுக்காக செலவிடுவது தவறு. வாங்கிய கடனை அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்க பயன்படுத்த வேண்டும், வாங்கிய கடனில் என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம். கல்வி, வேலைவாய்ப்புக்கான முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். சட்டசபையில் அரசியல் பிமர்சனம் செய்யாமல் வேறு எங்க செய்றது? முதல்வர் விஜய் குட்டி கதை சொன்னதுல தவறில்லை. எதிர்க்கட்சியும் பதில் சொல்லட்டும், ஆளுங்கட்சியும் பேசட்டும். தப்பு ஒன்றும் இல்லையே! முதல்வர் விஜய் மத்திய அரசுடன் கண்மூடித்தனமான மோதல் போக்கை கடைப்பிடிக்க விரும்பலனு சொன்னதை வரவேற்கிறேன். மத்திய அரசுடன் இணக்கமாக இருப்போம் என தவெக கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. தமிழகத்திற்கு நிதி நிலுவை எதுவும் இல்லை” என்றார்.

