திமுக அரசின் இந்து விரோத செயலை வன்மையாக கண்டிக்கிறேன் - நிர்மலா சீதாராமன்

 
nirmala sitharaman

ராமர் கோவில் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப வாய்மொழி மூலமாக தமிழக அரசு தடை விதித்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதாவது: , 22 ஜனவரி 2024 அன்று நடைபெறும் ராமர் கோவில் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப வாய்மொழி மூலமாக தமிழக அரசு தடை விதித்துள்ளதாக செய்திகள் வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் வருத்தத்திற்குரியது. தமிழகத்தில் ஸ்ரீராமருக்கு 200க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படும் கோவில்களில் ஸ்ரீ ராமரின் பெயரில் பூஜை/பஜனை/பிரசாதம்/அன்னதானம் அனுமதிக்கப்படுவதில்லை.


தனியாருக்கு சொந்தமான கோவில்களில் நிகழ்ச்சிகளை நடத்துவதையும் போலீசார் தடுத்து வருகின்றனர். பந்தல்களை கிழித்து விடுவோம் என அமைப்பாளர்களை மிரட்டுகின்றனர். இந்த இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாக கண்டிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.