நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பு!
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான வழியில் நடத்த முயற்சித்ததாக அக்கல்லூரியின் பேராசிரியர் நிர்மலா தேவி கடந்த 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அத்துடன் இந்த விவகாரத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது கடந்த 2018ல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கானது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
ஸ்ரீவில்லிபுரத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது இந்த வழக்கானது நீதிபதி பகவதி அம்மாள் முன்னிலையில் இருதரப்பு வாதங்கள் நிறைவு பெற்ற நிலையில் கடந்த 26 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது . நீதிமன்றத்தில் முருகன் , கருப்பசாமி ஆகியோர் ஆஜராகிய நிலையில் நிர்மலாதேவி ஆஜராகவில்லை. இதன் காரணமாக வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.