விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக அமித்ஷாவிற்கு நிர்மல்குமார் கடிதம்
தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு தமிழக வெற்றி கழகத்தின் இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் கடிதம் எழுதியுள்ளார்.
'Y' பிரிவு பாதுகாப்பில் உள்ள விஜய்க்கு உரிய பாதுகாப்பு இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு தமிழக வெற்றி கழகத்தின் இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் கடிதம் எழுதியுள்ளார். அதில், காவல்துறையிடம் அனுமதி பெறப்பட்டு திட்டமிட்ட பரப்புரைக்கு பாதுகாப்பு தரப்படவில்லை. கூட்டம் அதிகமாக இருந்த இடங்களில் பேருந்துகளை அனுமதித்தனர். விஜய் பிரச்சாரத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் உயர் அதிகாரிகள் யாரும் ஆய்வு செய்யவில்லை, விஜய் பிரச்சாரத்திற்கு செல்லும்போது மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. விஜய் பேச்சை மக்கள் கேட்க கூடாது என்பதற்காக தடையை ஏற்படுத்துகிறார்கள். நெரிசல் காரணமாக மக்களை விஜய் சந்திக்க முடியவில்லை. கொளத்தூரில் முறையான பேரிகார்டுகளை காவல்துறை வைக்கவில்லை என்றார்.
பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக மத்திய உள்துறைக்கு தவெக எழுதிய கடிதத்தில், இப்போதைய உள்துறை செயலாளர் `கோவிந்த் மோகன்’ பெயருக்கு பதிலாக `அஜய்குமார் பல்லா’ என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னாள் உள்துறை செயலாளரான அஜய் குமார் பல்லா, கடந்த ஆண்டு ஜனவரி மாதமே மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டதும் 2024 ஆகஸ்ட்டில் இருந்து கோவிந்த் மோகன் உள்துறை செயலாளராக பொறுப்பு வகித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

