தவெக எம்எல்ஏக்களுக்கு ரூ.50 கோடி வரை பேரம்- செந்தில்பாலாஜி மீது நிர்மல்குமார் குற்றச்சாட்டு

 
ச்

``திமுக குதிரை பேரம்- துணை போகும் EPS’’- அமைச்சர் நிர்மல்குமார்

தவெக எம்.எல்.ஏக்களைத் தொடர்பு கொண்டு பல கோடிகளைத் தருவதாக பேசுகின்றனர் என அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர திமுக குதிரை பேரம் நடத்தி வருகிறது. எதிர்த்து வாக்களிக்க தவெக MLA-க்களிடம் ரூ.50 லட்சம் வரை பேரம் பேசுகிறார்கள். எடப்பாடி பழனிசாமியும் இதற்கு துணை போகிறார். பேரம் பேசியவர்கள் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது சகோதரர்களுக்கு நெருக்கமானவர்கள். எங்களிடம் ஆதாரம் உள்ளது. சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் கட்டாயம் கடுமையாக எடுக்கப்படும். 

மு.க.ஸ்டாலின், உதயநிதியின் உத்தரவின் பேரில் செந்தில்பாலாஜி போன்ற ஆட்கள் ஒவ்வொரு நாளும் எங்கள் எம்.எல்.ஏக்களை தொடர்புகொண்டு பல கோடிகளை தருவதாக பேசுகின்றனர். இதனால்தான் மு.க.ஸ்டாலின் 30 நாட்களில் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடுமென சொல்கிறார். உங்கள் கட்சியின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி தவெக எம்.எல்.ஏக்களிடம் கோடிக்கணக்கில் பேரம் பேசியிருப்பது காவல்துறை விசாரணையில் ஆதாரங்களுடன் அம்பலமாகியுள்ளது. இதற்கெல்லாம் தலைமையாக இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா? செந்தில்பாலாஜி அறிவுரை பேரிலேயே ஆட்சி கவிழ்ப்பு முயற்சி நடந்தது. தவெகவில் சேருபவர்கள் மீதான வழக்கில் எந்த சமரசமும் கிடையாது. திமுகவின் செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கின்றனர். திமுகவுடன் இணைந்து எடப்பாடி ஆட்சி அமைக்க முயன்றதை தாங்க முடியாமல் அதிமுக நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகுகிறார்கள். எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறார்கள் என்றால் எந்த அளவிற்கு மன வேதனையில் இருந்திருப்பார்கள்” என்றார்.