தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்.... புதிய கட்டுப்பாடுகளை விதித்த தமிழக அரசு...

 
இரவுநேர ஊரடங்கு


தமிழகத்தில் நாளை இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால், அதனைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.  சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், தலைமை செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் பலர்  பங்கேற்றனர்.  இந்த ஆலோசனை கூட்டத்தில் இரவு நேர ஊரடங்கு,  ஞாயிறு முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு

இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து  தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,

1. மாநிலம் முழுவதும் 6 .01 . 2022 (நாளை ) முதல் வாரநாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலும் ஊரடங்கு அமல் படுத்தப்படும்.   இந்த நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள்,  வணிக நிறுவனங்கள், ,உணவகங்கள் போன்றவை செயல்பட அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த இரவு நேர ஊரடங்கின் போது அரசு மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் மருத்துவமனைகள் மற்றும் அத்தியாவசிய பணிகளுக்காக வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என்றும்,  பெட்ரோல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவாவில் இரவு நேர ஊரடங்கு

2. வரும் 09.01.22  ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும்.  அத்தியாவசிய பணிகளான மருத்துவமனைகள்,  மருந்தகங்கள் ,பால் விநியோகம், ஏடிஎம் மையங்கள், சரக்கு வாகன போக்குவரத்து மற்றும் பெட்ரோல் டீசல் பங்குகள் போன்றவை இயங்குவதற்கு அனுமதிக்கப்படும்.   ஞாயிற்றுக்கிழமை  முழு ஊரடங்கின்போது பொது போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் சேவைகள் இயங்காது.  ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும் என்றும், உணவு  டெலிவரி சேவை அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு ஊரடங்கு
3.  அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி தடை விதிக்கப்படுகிறது.  பொதுத் தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் எதிர்கால நலன் கருதி தடுப்பூசி பெற்றுக் கொள்ள எதுவாய் 10, 11 மற்றும்  12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும்.  அரசு தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவ கல்லூரிகள் தவிர,  அனைத்து கல்லூரிகள் மற்றும்  தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் தேர்வு எழுதும் பொருட்டு ஜனவரி 20ஆம் தேதி வரை விடுப்பு அளிக்கப்படுகிறது.

4.  பேருந்துகள் மற்றும் புறநகர் ரயில்களில் உள்ள இருக்கைகளில் 50 சதவிகிதம் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க வேண்டும்.  மெட்ரோ ரயிலில் 50% இருக்கைகள் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

5. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி,  சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.