FIR கசிந்தது எப்படி? - தேசிய தகவல் மையம் விளக்கம்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொழுமை செய்யப்பட்ட வழக்கில் FIR கசிந்தது தொடர்பாக தேசிய தகவல் மையம் விளக்கம் அளித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய ஞானசேகரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் உள்ளார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய மகளிர் ஆணைய குழு அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் FIR கசிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மாணவி பாலியல் வன்கொழுமை செய்யப்பட்ட வழக்கில் FIR கசிந்தது தொடர்பாக தேசிய தகவல் மையம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது, பிசியில் இருந்து பி.என்.எஸ் குற்றவியல் சட்டத்திற்கு மாற்றுவதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் FIR கசிந்ததாக தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் FIR கசிந்தது தொடர்பாக தமிழக அரசுக்கு, தேசிய தகவல் மையம் பதில் அளித்துள்ளது.